நேரு நகரில், டூ வீலரின் பின்னால் பயணிகள் ஆட்டோ மோதி விபத்து.

84பார்த்தது
நேரு நகரில் திடீரென டூ வீலரை திருப்பியதால், பின்னால் வந்த பயணிகள் ஆட்டோ மோதி. 4- பேர் படுகாயம்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தொக்குப்பட்டி அருகே உள்ள கருங்கல் புளியம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் வயது 43. இவர் பயணிகள் ஆட்டோ ஓட்டுனர்.

ஜூன் 2-ம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் - சின்னதாராபுரம் சாலையில், பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.


இவரது ஆட்டோ நேரு நகர் பாலமுருகன் பைப் கம்பெனி அருகே சென்றபோது, அரவக்குறிச்சி தாலுக்கா, கஞ்சனம்பட்டியை சேர்ந்த தர்மராஜ் வயது 31 என்பவர் டூவீலரில், பயணிகள் ஆட்டோவை முந்தி சென்று, திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், டூவீலரை வலது புறம் திருப்பியதால், பின்னால் ரமேஷ் குமார் ஓட்டி வந்த பயணிகள் ஆட்டோ டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் குமார், மற்றும் பயணிகள் கருங்கல் புளியப்பட்டியை சேர்ந்த பூபதி, கணேசன், டூ வீலரை ஓட்டிச் சென்ற தர்மராஜ் ஆகிய 4- பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து ரமேஷ் குமார் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்னதாராபுரம் காவல்துறையினர்.

டேக்ஸ் :