பாண்டிமேடு பெருமாள் கோவில் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய 9- பேர் கைது. ரூ. 4500 பறிமுதல்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜசேர்வைக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் ஏப்ரல் 9-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியான ஆண்டிமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அருகில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது கண்டறியப்பட்டது.
இந்த சேவல் சண்டையில் ஈடுபட்ட கரூர் வெங்கமேட்டை சேர்ந்த சூர்யா, பொன்னுச்சாமி, கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்த ஜீவானந்தம், சசிகுமார், மோகன், கரூர் வாங்கலை சேர்ந்த கண்ணன், கரூர் சின்னாண்டாங் கோவிலை சேர்ந்த பிரவீன், மனு நீதி, நெரூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிலம்பரசன் உள்ளிட்ட ஒன்பது பேரையும் கைது செய்து, அவர்கள் சேவல் சண்டை நடத்த பயன்படுத்திய 4- சேவல்களையும், ரூபாய் 4500 யும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 9- பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.