குமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை பகுதிகள் சாலைகள் மிகவும் மோசமாக பயங்கர குழிகளாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க உடனடியாக 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக விஜய் வசந்த் எம் பி அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வரும் நிலையில், சாலையில் உள்ள மரண குழியில் தேங்கிய மழை நீரில் உட்கார்ந்து துணி துவைத்து குளிக்கும் காட்சியை வீடியோவாக எடுத்து சில இளைஞர்கள் அதை வெளியிட்டுள்ளனர்.
மேலும் நூதன முறையில், இதை பார்க்கும் அதிகாரிகள் சாலையின் அவலத்தை கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படியாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் பார்க்க வேண்டி இந்த வீடியோ வெளியிடுவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.