கனிமவள லாரி மோதி மாணவி பரிதாபச்சாவு

69பார்த்தது
கனிமவள லாரி மோதி மாணவி பரிதாபச்சாவு
கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு மணக்காலை பனவிளை பகுதியை சேர்ந்தவர் வினு, இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், விஷால் (14) , என்ற மகனும், விசாகா (12 ) , என்ற மகளும் உண்டு இதில் விஷால் 9-ம் வகுப்பும், விசாகா 6- ம் வகுப்பும் மார்த்தாண்டத்தை அடுத்த பம்மம் பகுதியை சேர்த ஒரு தனியார் பள்ளியில் படித்துவருகின்றனர், குழித்துறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது , எதிரே அந்த வழியாக வேகமாக வந்த கனிம வள லாரி மோதியதில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மாணவி விசாகா சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். மேலும் படுகாயம் அடைந்த தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வலியால் துடித்து அலறினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூன்று பேரையும் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு முதல்லுதவி செய்யப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செல்லும் வழியில் விசாகா பரிதாபமாக உயிரிழந்தார். தாய் மற்றும் மகனுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய கனிமவள லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி