மூவாற்றுமுகத்தில் ஆதிகே சிவபெருமானுக்கு ஆராட்டு

55பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் முக்கியமான தானே திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கோவில் தந்திரி கோகுல் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி முன்செல்ல, கிருஷ்ணர் வேடமணிந்த கதகளி கலைஞருடன் சிங்காரி மேளம், வாத்தியத்திங்கள் முழங்க தாலப்பொலியுடன் கோயிலில் இருந்து சுவாமி பவனி நடந்தது. ஆற்றூர், கழுவன் திட்டை, தோட்டவாரம் வழியாக அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசாமியும் மூவாற்று முகம்த்தில் பரளிஆறு, கோதைஆறு, தாமிரபரணி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் ஆறாட்டுக்கு எழுந்தருளினர். அங்கு ஆதிகேசவப்பெருமாள், கிருஷ்ணசாமிக்கு ஆறாட்டு நடந்தது. பின்னர் பூஜைகளுக்குப்பின்னர் கருடவாகனத்தில் சுவாமி சிலைகள் கோவிலுக்கு திரும்பி வந்தபோது. அப்போது வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும் பக்தர்களும் செய்திருந்தனர்.