விவேகானந்த மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை இன்று தொடங்கியது

52பார்த்தது
விவேகானந்த மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை இன்று தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டத்தில்  தொடர்  மழைபெய்து வருவதால்  கடலில் அமைந்துள்ள  விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.   குமரி கடலில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக இந்த அறிவிப்பை பூம்புகார் கப்பல் கழகம் வெளியிட்டிருந்தது.   கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு  மட்டுமின்றி வட்டக் கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த நவீன  சுற்றுலா படகு சேவையும்  ரத்து செய்யப்பட்டிருந்தது.

    மேலும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு அருகே சென்று பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
     இந்நிலையில் கடலின் தன்மை இயல்பு நிலைக்கு திரும்பியது. கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல் சுற்றுலா படகு சேவை இன்று காலை முதல் தொடங்கியது. கடலின் தன்மை இயல்பு நிலையில் இருப்பதால் சுற்றுலா படகு சேவை தொடங்கியதாக பூம்புகார் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி