108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் ஆதிகேசவபெருமாள், கிருஷ்ணர் சேர்ந்து தளியல் முத்தாரம்மன் கோவில் பகுதியில் பள்ளி வேட்டை நடத்தினர்.
10-ம் விழாவான நேற்று கோவிலில் திருவிலக்கம் நிகழ்வு நடந்தது. மாலையில் ஆதிகேசவ பெருமாள், கிருஷ்ணர் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் திருவிதாங்கூர் மன்னர் குடும்பப் பிரதிநிதி வாள் ஏந்தி முன் செல்ல, போலீசார் மரியாதை செலுத்தி பக்தர்கள் தாலப் பொலி ஏந்தி கழுவன் திட்டை, தோட்டவரம் வழியாக சென்று மூவற்று முகத்தில் சுவாமி ஆராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தொடர்ந்து ஆறாடி விட்டு திரும்பி கோவில் வரும் வழியில் ஆற்றூர் பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் முன்பு புஷ்ப அபிஷேக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சுவாமிகள் விக்ரங்கள் கோவிலில் வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.