தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி 25-ம் ஆண்டு விழா

61பார்த்தது
தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி 25-ம் ஆண்டு விழா
சுங்கான்கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி 25-வது ஆண்டு ஜூபிலி நிறைவு விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் குழித்துறை
மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ்  தலைமை வகித்தார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் வேல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
       விழாவில் மறை மாவட்டத்தின் பங்குகளில் உள்ள மாணவர்களுக்கு பரிசுத் தொகை திட்டம், கன்னியாகுமரி மாவட்ட பாரம்பரிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு ஆகிய சிறப்பு திட்டங்களை ஆயர் தொடங்கி வைத்தார்.
      குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும்
கல்லூரியில் நிறுவப்பட்ட சூரிய ஒளி மின் சக்தி திட்டம் ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார்.
        விழாவில் பேச்சிப்பாறை தோட்டமலை மலைவாழ் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு சூரிய மின் விளக்கிற்கான காசோலையையும், சுங்கான்கடை அம்பேத்கர் காலனி மக்கள் பயன்பாட்டிற்கு ஆழ்துளை
கிணற்றிற்கான காசோலையையும்,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்  பயனாளிகளிடம்
வழங்கினார். வெள்ளி விழா ஜூபிலி மலரை  ஆயர் வெளியிட, முதல் பிரதியை அண்ணா பல்கலைக்கழக
துணைவேந்தர் பெற்றுக் கொண்டார்.
        கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் இக்கல்லூரியில் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.

தொடர்புடைய செய்தி