நாகர்கோவிலில் நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற அதிமுக களஆய்வுக் கூட்டத்தில், தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவரின் தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் சட்டையைக் கிழித்துக்கொண்டு சண்டையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் காணப்பட்டது.