குமரி: போக்குவரத்து விதிகளை மீறிய 2,128 பேர் மீது வழக்கு

66பார்த்தது
குமரி: போக்குவரத்து விதிகளை மீறிய 2,128 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் மீது போலீசார் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்கள், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாது இருப்பது, வாகன சாகசத்தில் ஈடுபடுவது, மது போதையில் வாகனம் ஓட்டுவது, நம்பர் பிளேட் இல்லாது இருத்தல் உள்ளிட்ட வாகன ஓட்டி உ கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் கடந்த7 நாட்களில் 2, 128 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்தந்த வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், கார்கள், வேன் உள்ளிட்டவற்றிக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்தி