ஓசூரில் வழக்கறிஞர் கண்ணன் கொடூரமாக வெட்டப்பட்டதை தொடர்ந்து, அதனை கண்டிக்கும் வகையிலும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றங்களை புறக்கணித்தனர். இன்று (நவ. 22) இரண்டாவது நாளாக நீதிமன்றங்களை புறக்கணித்துள்ளனர். நாகர்கோவில், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், இரணியல் மற்றும் குழித்துறை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணித்தனர்.