நாகர்கோவில் பள்ளிவிளை டவுன் ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சந்தே கத்தின் அடிப்படையில் அங்கு கைப்பையுடன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். உடனே அந்த வாலிபர்கள் சப்-இன்ஸ்பெக்டர் சதீசை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 30 கிராம்கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வாலிபர்களை பிடித்து வடசேரி போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வல்லன் குமாரன்விளையை சேர்ந்த வினித் (வயது 25), அஜய் (22) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடந்து வினித் அஜய் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.