நித்திரவிளை அருகே வாவறை பகுதி செம்பருத்தி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான் கிரிஸ்டல் (47). இவர் குழித்துறை பணிமனை 1-ல் ஓட்டுனராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தடம் எண் 83 என்ற அரசு பஸ்சை இரையுமன் துறை பகுதியில் இருந்து மார்த்தாண்டத்திற்கு ஓட்டி வந்தார்.
அப்போது பாலாமடம் பகுதியில் வைத்து எதிரே ரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்த பிரஷிப் (32) என்பவர் ஓட்டி வந்த பைக் திடீரென அரசு பேருந்து மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரஷிப், நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது சம்பந்தமாக ஜான் கிரிஸ்டல் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் பிரஷிப் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.