குளச்சல் நகர அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

63பார்த்தது
குளச்சல் நகர அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நகர அலுவலகத்தில் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், நகர முன்னாள் செயலாளர் அருள்தாஸ், மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற இணை செயலாளர் ஆனக்குழி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது வரவேற்று பேசினார். நகர இணை செயலாளர் செர்பா தீர்மானங்கள் வாசித்தார். மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற தலைவர் எஸ். எம். பிள்ளை, ராஜ்குமார், ஆன்றோவின்சென்ட், முன்னாள் கவுன்சிலர்கள் சூசைமரியான், மரியவிக்டர், பெலிக்ஸ் ராஜன் மற்றும் குமாரதாஸ், தர்மராஜ், புஷ்பலதா, ஜெகன், அம்பிளிகலா, அம்பிகா, , செல்வராணி, வினோத், ரமேஷ்பாபு, மலுக்கு முகம்மது, சுபல் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு அதிகயளவு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி மாவட்ட நிர்வாகத்தை கேட்பது, குமரி கடலில் மீன் பிடிக்க சென்று மாயமாகும் மீனவர்களை துரிதமாக கண்டுபிடித்து மீட்பதற்கு குளச்சலை மையமாக கொண்டு ஹெலிகாப்டர் தளம் அமைக்க கேட்பது மற்றும் வரும் 24 ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும் வலியுறுத்தப்பட்டது. நகர மகளிர் அணி செயலாளர் சுபசந்தியா ன்றி கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி