கீழ்குளம்: கண்டக்டர் குடும்பத்துக்கு அரசு 10 லட்சம்

63பார்த்தது
கீழ்குளம்: கண்டக்டர் குடும்பத்துக்கு அரசு 10 லட்சம்
சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், பேருந்தின் நடத்துனர் குமரி மாவட்டம் கீழ்குளம் பகுதி ஜெகன் குமாரை தாக்கியதில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தாருக்கு தமிழக அரசு சிறப்பு தொகை வழங்க வேண்டும் என சங்கத்தின் சார்பில், தொ மு ச பேரவை பொது செயலாளர் மு. சண்முகம் M P, பேரவை தலைவர் கி. நடராசன் ஆகியோர்  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை வைத்தனர்.  

அதன் பேரில்  முதலமைச்சர் பணியின் போது இறந்த நடத்துனர்  ஜெகன் குமார் குடும்பத்திற்கு, தமிழக அரசின் சார்பாக ரூபாய் பத்து லட்சம். வழங்கப்படும் என  அறிவித்தார்கள். அதனை தொடர்ந்து காசோலையினை சங்கத்தின் தலைமை நிலைய செயளாளர் தங்கராஜ் தலைமையில், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பி கோபால் மற்றும் கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி