குளச்சல் மூதாட்டியிடம் 7. 5 பவுன் நகை பறிப்பு

1104பார்த்தது
குளச்சல் மூதாட்டியிடம் 7. 5 பவுன் நகை பறிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பர்னட்டிவிளையை சேர்ந்தவர் ஐசக். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி செல்லத்தங்கம் (75). மகன்களுடன் வசித்து வருகிறார். மகன்கள் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு அருகே அச்சகம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலை 3 மணியளவில் இவர்களது வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் பின் பக்க கதவை தட்டி உள்ளான். சப்தம் கேட்டு செல்லத்தங்கம் கதவை திறந்து யார்? என பார்த்தார். அதற்குள் வெளியே நின்றுக்கொண்டிருந்த  மர்ம நபர் செல்லத்தங்கத்தின் கழுத்தில் கிடந்த சுமார் 7. 5 பவுன் தங்க நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான். இந்த தகவலறிந்த அவரது மகன்கள் விரைந்து வீட்டிற்கு சென்றனர். பின்னர் நடந்த சம்பவத்தை செல்லத்தங்கம் பிள்ளைகளிடம் கூறினார். இது குறித்து குளச்சல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி சி. சி. டி. வி. கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து, மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி