கிள்ளியூர் - Killiyur

நித்திரவிளை:  திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

நித்திரவிளை: திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

குமரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நித்திரவிளை சந்திப்பில் நேற்று இரவு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவந்த ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், பாராளுமன்ற தொகுதிகள் குறைப்பு ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். திமுக மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ, சிறப்பு பேச்சாளர்கள் இந்திரகுமார் தேரடி, ஜெபின், கிள்ளியூர் தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட துணைச் செயலாளர் ராஜ், மாவட்ட அவைத்தலைவர் மரிய சிசுக்குமார் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా