தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் துறைமுகம் சேதமடைந்தது. இதையடுத்து குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா சேதப் பகுதிகளை ஆய்வு செய்ததோடு, புதிய ஜெட்டிக்கு செல்லும் பகுதியில் பாலம் கட்டுமான பணி நீதிமன்ற வழக்கில் உள்ளதால் புகார் கொடுக்கப்பட்ட நபரை அழைத்து பேசவும், புதிய ஜெட்டிக்கு செல்லும் பாதை பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுக ஏலக்கூடாராத்தினை ஆய்வு மேற்கொண்ட போது, ஏலக்கூடாரத்தின் உடைந்த தரைப்பகுதியினை சரிசெய்து, கழிவுநீர் ஓடையில் கிரில் போட வேண்டும் என்றும், கழிவறையினை சுத்தமாக வைத்துக்கொள்ள தரம் வாய்ந்த பொருட்களை (Cleaning) பயன்படுத்தவும், ஆண்கள் மற்றம் பெண்கள் கழிவறையினை பிரித்து சுவர் அமைத்திடவும் அறிவுறுத்தினார்.
மேலும் மீன்பிடித்துறைமுகத்திலுள்ள உணவகம் போதுமான இடவசதி இல்லாததால் மீனவர் ஓய்வறையினை உணவகமாக மாற்றி மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் உணவத்தினை நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.