தக்கலை அருகே கொற்றிக்கோடு பகுதி சரல்விளையை சேர்ந்தவர் ஜெகன் ரத்தினராஜ். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவரது மகள் ஜென்சி (22) மற்றும் மகன் பாட்டியுடன் வசித்து வருகின்றனர். ஜென்சி நகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜென்சி மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடிப் பார்த்தும், தோழிகளிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.