கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் (பொறுப்பு) மற்றும் போலீசார் நேற்று (டிசம்பர் 14) சிலுவைப்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளி அருகில் ஒரு சொகுசு காரின் முன்பு மாணவர்கள் கூட்டமாக நின்றுள்ளனர்.
போலீசார் வருவதை கண்டதும் மாணவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தபோது, இரண்டு நபர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இரண்டு நபர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அவர்கள் சிலுவைப்புரம் பகுதி அஜின் (29), பனச்சமூடு பகுதி சிஜு (22) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 480 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து காரையும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.