திருவட்டார் கோவில் பங்குனித் விழாவுக்கு கொடிக் கயிறு ஊர்வலம்

63பார்த்தது
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் கட்டுபாட்டிலுள்ள 12காவுகோவில்களில் ஒன்றான ஆற்றூர் அருகே பள்ளிகுழிவிளை பள்ளி கொண்ட காவு கோவிலிருந்து கொடிக் கயிறு மற்றும் சீர்வரிசை பொருட்களை, முத்துக் குடை, தாலப் பொலியுடன் கழுவன் திட்டை, சந்தை, தபால் நிலைய சந்திப்பு வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் சமர்பிக்கப்பட்டது. கொடி கயிறை அர்ச்சகர் கருவறையில் பூஜையில் வைத்தார். இந்த கொடிகயிறு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பங்குனித்திருவிழாவின் முதல் நாளான நாளை ஏப்ரல் 12. ந் தேதி காலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7. 00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், காலை 8. 45லிருந்து 9. 30 மணிக்குள் பஞ்சவாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்று, மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.

முன்னதாக இன்று(11. ந்தேதி) மாலை 4. 30 மணிக்கு கொடியேற்றுவதற்குரிய கொடிக்கயிறு ஆற்றூர் பள்ளிகொண்ட பள்ளிக்குழிவிளை தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மாலை தீபாராதனைக்கு முன்னதாக ஆதிகேசவப்பெருமாள் கோவில் கருவறையில் சமர்பிக்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி