சோதனை சாவடியில் எஸ்ஐ மீது தாக்குதல் 2 பேர் கைது

84பார்த்தது
சோதனை சாவடியில் எஸ்ஐ மீது தாக்குதல் 2 பேர் கைது
கொல்லங்கோடு அருகே மிக்கேல் காலனியில் சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனை சாவடியில் நித்திரவிளை போலீஸ் நிலையத்தை சேர்ந்த சிறப்பு எஸ்ஐ முருகன் (55) என்பவர் நேற்று மாலை பணியில் இருந்தார்.

     அப்போது சோதனை சாவடி வழியாக நடந்து சென்ற இருவர் முருகனிடம்  பிரச்சனையில்  ஈடுபட்டு அவரின் கழுத்து பகுதிகளில் தாக்கி,  கல் வீசியும்  தாக்கியுள்ளனர்.

      இது சம்பந்தமாக சிறப்பு எஸ்ஐ கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

      விசாரணையில் அவர்கள் பொழியூர் அருகே தெற்கே கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (37), தாஸ் (48) என்பது தெரிய வந்தது. இது சம்பந்தமாக சிறப்பு எஸ் ஐ கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

     போலீசார் வழக்கு பதிவு செய்து தாஸ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தாக்குதலில் காயம் அடைந்த சிறப்பு எஸ் ஐ முருகன் குதித்துறை  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி