கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு பூஜை.

587பார்த்தது
கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு பூஜை.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோவிலில் நேற்று புத்தாண்டு தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி, 4. 30 மணிக்கு நிவேத்திய பூஜை, தொடர்ந்து 5 மணி முதல் காலை 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து 8 மணி முதல் 9 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை தொடர்ந்து 9 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது. பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வ தரிசனத் துக்காக நடை திறந்து வைக்கப்பட்டது. 5. 30 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை, 5. 30 மணி முதல் இரவு 8. 45 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்பட்டனர். 8. 45 மணி முதல் 9 மணி வரை வெங்க டேஸ்வர பெருமாள் பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி