காசி விஸ்வநாதர் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா.

553பார்த்தது
காசி விஸ்வநாதர் கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்தகாசி விஸ்வநாதர் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி வில்வம், புங்கை, நாவல் உள்பட 24 வகையான நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன். நாகர்கோவில் தேவசம் தொழும் சேடவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் குமரி திருக்கோவில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார். மாவட்ட அணிகளின் துணை மாவட்ட ஜென்சன்ரோச், நிஷார், மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், ஒன்றிய அமைப்பாளர்கள் அன்பழகன் கவுன்சிலர் பிர், நிலர், ஆன்டோ பாஸ்கோ, வார்டு செயலாளர் நூகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி