கன்னியாகுமரி: மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு

1537பார்த்தது
கன்னியாகுமரி: மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு
கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் கடலும், காயலும் கலக்கும் இடத்தில் மீன்கள் வெளியேறிவிடாமல் தடுக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. இந்த வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வலையில் சிக்கிய பாம்பை லாவகமாக மீட்டனர். அந்த பாம்பு 8 அடி நீளமுடையது. பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி