கன்னியாகுமரியில் 3 நாட்கள் படகு சேவை நேரம் நீட்டிப்பு

1882பார்த்தது
கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண வசதியாக வருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் படகு போக்குவரத்து கூடுதலாக 4 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு தொடங்கும் படகு சேவை 2 மணி நேரத்துக்கு முன்னதாக காலை 6 மணிக்கு தொடங் கப்படுகிறது. அதே போல மாலை 4 மணிக்கு நிறுத்தப்படும். படகு போக்குவரத்து கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப் பட்டு மாலை 6 மணிக்கு நிறுத்தப்படும். இந்த தகவலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி