பூதப்பாண்டி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது.

75பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள பெருந்தலைக்காடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பூதப்பாண்டி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போது 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சோதனையிட்ட போது கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தடிக்காரன்கோணத்தை சேர்ந்த ஆகாஷ் (வயது 23), நைனார்பொத் தையை சேர்ந்த அஜித் (17) என்பதும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3. 50 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி