குமரியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது.

83பார்த்தது
குமரியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது.
அஞ்சுகிராமத்தை அடுத்த கனகப்பபுரம் அரசு பள்ளி அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பால்குளம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த இசக்கி முத்து (வயது 25) மற்றும் கொட்டாரம் நாராயணன் புதூரை சேர்ந்த அஜித்குமார் (28) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களையும், ரூ. 200-ஐ பறிமுதல் செய்து, 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி