செய்யூர் அருகே விவசாய நிலங்களில் நெல் பயிரை மாடு மேய்வதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள அம்மனூர் கிழச்சேரி செங்காட்டூர் சுண்டிவாக்கம் கிராமப் பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பொதுமக்கள் தற்பொழுது பருவமழை காரணமாக தங்களுடைய விளைநிலங்களில்
உள்ள நெல் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது அப்பயிர்களை பக்கத்து கிராமங்களில் உள்ள கால்நடைகள் நெல் பயிர்களை கடித்து நாசம் செய்வதால் கோபம் அடைந்த பொதுமக்கள் செய்யூரில் இருந்து பவுஞ்சூர் செல்லும் சாலையில் வடக்கு செய்யூர் என்னும் இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
அப்பொழுது சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மாடுகளை கட்டாமல் மாட்டின் உரிமையாளர் விடுவதால் தற்போது கதிர் வரும் நிலையில் உள்ள நெற்பெயர்களை மாடுகள் நாசம் செய்கின்றது இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பெயரில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.