உத்திரமேரூர் செல்போன் கடையில் திருட்டு சிசிடிவி காட்சி.

71பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்டேட் பாங்க் அருகில் மணிகண்டன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை சுமார் இரண்டு மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருள் மற்றும் கல்லாவில் இருந்த சுமார் அறுபதாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்திரமேரூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடையில் திருடிய நபர்கள் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி