"விமான நிலையத்திற்கு பலியாகும் ஏரிகள் ஆய்வு

54பார்த்தது
"விமான நிலையத்திற்கு பலியாகும் ஏரிகள் ஆய்வு
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தும் ஏரிகளுக்கு மாற்றாக புதிய நீராதாரங்களை உருவாக்க

நீர்வளத்துறை திட்டமிட்டு, அதற்கான ஆய்வை துவங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 5, 746 நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில், விவசாய நிலங்கள் மட்டுமின்றி 14 ஏரிகளும் உள்ளன. நிலம் மற்றும் ஏரிகளை கையகப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, 7 ஏரிகள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளது.

மீதமுள்ள ஏரிகள், 20 முதல் 40 சதவீத அளவிற்கு நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பல ஏக்கர் பரப்பளவிலான கால்வாய்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, இழப்பீட்டை அதிகரித்து, விவசாய நிலங்களை கையப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, ஐ. ஏ. எஸ். , அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் குழுவை அரசு அமைத்துள்ளது.

ஏரிகளை கையகப்படுத்தும்போது, அதற்கு மாற்றாக புதிய நீராதாரங்களை உருவாக்குவதற்கும் அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து, நீர்வளத்துறை வாயிலாக ஆய்வுகள் துவங்கியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி