அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

58பார்த்தது
தனியார் தொண்டு நிறுவனம் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பங்கேற்பு


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல். எண்டத்தூர், நல்லாமூர், ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கினர். பின்பு அங்குள்ள நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் விவேகானந்தன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி