புதுப்பட்டிணம் கிராமத்தில் வாக்களித்த மணப்பாறை எம் எல் ஏ

67பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுகள் தீவிரம்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் முதற்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட திருக்கழுக்குன்றம் கல்பாக்கம் புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் காலையிலிருந்து பொதுமக்கள் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக நத்தம் கரியச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவரும், ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவருமான கரியச்சேரி சேகர் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் தொடர்ந்து புதுப்பட்டிணம் அரசு பள்ளியில் மணப்பாறை எம்எல்ஏவும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் பொதுச் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது தான் படித்த பள்ளியில் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியதுடன் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர் வயது முதிர்ந்தோரை தன்னார்வளர்களும் போலீசாரும் கை பிடித்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து செல்வதும் வெளியில் விடுவதுமான பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.