காலாவதி மாத்திரை குவியல் அணுகு சாலையில் ஆபத்து

2261பார்த்தது
காலாவதி மாத்திரை குவியல் அணுகு சாலையில் ஆபத்து
திருநீர்மலை பகுதியில் அணுகு சாலையை ஒட்டி, கட்டட கழிவுகள், ரசாயனம் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவது அதிகரித்து உள்ளது.

அதேபோல், குப்பை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல, இவற்றை உண்பதற்காக கால்நடைகளும் அங்கு சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.

காலாவதியான மாத்திரைகளை முறையாக அழிக்காமல், மூட்டை மூட்டையாக கட்டி வந்து கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதனால், மக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபட்டோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி