காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி, வல்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ், (55). இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட 'குட்கா' உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வாலாஜாபாத் போலீசார் நேற்று(செப்.12) வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஜெயராஜ்க்கு சொந்தமான கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 8, 000 ரூபாய் மதிப்பிலான 'குட்கா' மற்றும் புகையிலை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஜெயராஜை வாலாஜாபாத் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.