பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடந்த செயற்குழுவில் பேசிய அவர், சமூக நீதியின் பாதையில் பயணிப்பதாக திமுக அரசு கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனில் திமுக அரசு அக்கறையுடன் செயல்படுகிறது. எதிர்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கும் ஆட்சியாளர்களுக்கு கண்டனம் என தெரிவித்துள்ளார்.