புதுக்கோட்டை மாவட்டம் அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (20) மற்றும் முருகானந்தம் (26) நேற்றிரவு (நவ. 02) முயல் வேட்டைக்கு சென்றனர். இந்நிலையில் இரண்டு பேரும் காட்டுக்குள் இன்று (நவ. 03) சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் உடலில் மின்சாரம் தாக்கிய காயங்கள் இருந்ததால் பன்றிக்காக அமைத்த மின் வேலியில் சிக்கி இருவரும் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.