ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஈரானிய பல்கலைக்கழகத்தில் இளம் பெண் ஒருவர் தனது ஆடைகளைக் கழற்றி, உள்ளாடை மட்டும் அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் காவலர்கள் அந்தப் பெண்ணை தடுத்து வைத்திருக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டதாகவும், அவரை விடுவிக்க பிற மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.