நுாறு நாள் வேலை வழங்க மறுப்பு - ஊராட்சி செயலர் மீது புகார்

67பார்த்தது
நுாறு நாள் வேலை வழங்க மறுப்பு - ஊராட்சி செயலர் மீது புகார்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டு தொன்னாடு ஊராட்சி உள்ளது. மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிக்கு, நேற்று முன்தினம் (செப் 27) 100 நாள் வேலை திட்ட அட்டை வைத்துள்ள பணியாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.

அந்த பணியாளர்களிடம், வீட்டு வரி செலுத்தாமல் வேலைக்கு வந்ததாகக் கூறி, 15க்கும் மேற்பட்டோரை, ஊராட்சி செயலர் மற்றும் பணி தள பொறுப்பாளர் திருப்பி அனுப்பி உள்ளனர். அதனால், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளரிடம், பாதிக்கப்பட்ட மக்கள், 100 நாள் வேலை வழங்கக்கோரி புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி