காப்புக்காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை

63பார்த்தது
காப்புக்காட்டில் தண்ணீர் தொட்டி ஏற்படுத்த கோரிக்கை
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அருகே, காவணிப்பாக்கம் காப்புக்காடு உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இக்காட்டில் மயில்கள் உள்ளிட்ட பல வகையான பறவைகளும், பல்வேறு வகையான மான்கள் போன்ற விலங்குகளும் வசிக்கின்றன.

ஆண்டுதோறும் கோடை காலத்தின்போது, இக்காட்டு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், வெயில் நேரங்களில், காட்டில் உள்ள பறவைகள் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அருகாமையில் உள்ள விவசாய நிலங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை தேடி அலைகின்றன.

அச்சமயங்களில், பறவைகளும் விலங்குகளும் வேட்டையாடும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், கவணிப்பாக்கம் காப்பு காட்டு பகுதியில், குறிப்பிட்ட துார இடைவெளியில் தண்ணீர் தொட்டி அமைத்து பறவைகள் மற்றும் வனவிலங்குகள் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி