ஆள வந்தார் அறக்கட்டையில் சுந்தரமான அரசு நிலம் மீட்பு

50பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு மீனவர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இவர்களின் பிரதான தொழில் மீன் பிடிப்பது.
இங்குள்ள துலுக்கானத்தம்மன் கோயில் அருகே உள்ள 40 வீடுகள் மற்றும் இறால் பண்ணை ஒன்றும் நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளை நிலம் எனக்கூறி இன்று காலை நீதிமன்ற உத்தரவுடன், இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலையில் மாமல்லபுரம் போலீஸ் டி. எஸ். பி ரவிஅபிராம் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் முதலில் இறால் பண்ணைக்கு சென்று இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என போர்டு வைத்து சீல் வைத்தனர்.
பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் 40 வீடுகளை இடிக்க முயற்சி செய்தனர். , பெண்கள், குழந்தைகள், என 500 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி தடுத்து நிறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது, பின்னர் ஊர்மக்கள் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் சர்வே எண் 274/4 ல் உள்ள வீடு ஒன்றை பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி பூட்டி சீல் வைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி