உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் பகுதியில், 500 ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளன.
பெருநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், அனுமந்தண்டலம் செய்யாற்று பகுதிக்கு செல்லும் வகையில் இளநகர் விவசாய நிலங்களையொட்டி மடு அமைந்து உள்ளது.
மழைக்காலங்களில், இந்த மடுவில் தண்ணீர் நிரம்பி காணப்படும். அச்சமயம், மடு தண்ணீர் வாயிலாக அப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொள்வர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக இளநகர் மடுவில் தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இது, அப்பகுதியில் சொர்ணவாரி பட்டத்திற்கு பயிரிட்டுள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான பாசன வசதி கிடைப்பதோடு, நீர்மட்டம் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.