மரகத தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூச விழா

67பார்த்தது
பெருக்கருணை கிராமத்தில் உள்ள அருள்மிகு மரகத தண்டாயுதபாணி திருக்கோயில் தைப்பூச விழா கோலாகலம்


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த நடுபழனி என அழைக்கப்படும் பெருக்கரணை கிராமத்தில் உள்ள அருள்மிகு மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு 108 பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதனை முன்னிட்டு இன்று காலை 7 மணி அளவில் கலச பூஜைகள், கணபதியாகம், மகா பூர்ணாக்ஷுதி, மகா தீபாரதனை உள்ளிட்டவை செய்யப்பட்டு 108 பால் குடம் மற்றும் காவடிகள் ஊர்வலமாக வந்து ஸ்ரீ மரகத தண்டாயுதபாணிக்கு பால் மற்றும் பன்னீர் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் மரகத தண்டாயுதபாணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பின்னர் அங்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அச்சரப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி