கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர் காவல் எல்லையில் அடங்கிய மேலக்கோட்டையூர், கீழக்கோட்டையூர் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.
சில சமயத்தில், வாகனங்களில் அடிபட்டு மாடுகளும் காயமடைகின்றன. இதை தடுக்க, நேற்று தாழம்பூர் போலீசார் அந்தந்த ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு மாடுகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்கர்ளுக்கு தலா 2, 000 ரூபாய் அபராதம் விதித்தனர்.