அடுத்தடுத்த வீடுகளில்.. ஆத்துாரில் திருட்டு

81பார்த்தது
அடுத்தடுத்த வீடுகளில்.. ஆத்துாரில் திருட்டு
செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் மதுராகுப்பம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 55. சென்னை, அடையாறு இந்திரா நகரில், வாடகை வீட்டில் தங்கி டைலர் கடை நடத்தி வருகிறார். வாரஇறுதி நாட்களில் மட்டும், மதுராகுப்பத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று காலை அக்கம்பக்கத்தினர் பார்த்த போது, கார்த்திக் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. தகவலின்படி, கார்த்திக் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த வெள்ளிக் குத்து விளக்கு மற்றும் கால் சவரன் தங்க மோதிரம் திருடு போனது தெரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் விசாரணையில், இதே கிராமத்தில் அஞ்சாலாட்சி, 60, என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே எந்த விலை உயர்ந்த பொருட்களும் இல்லாததால், வீட்டில் இருந்த பொருட்களை கலைத்து விட்டு சென்றது தெரிந்தது. அதேபோல், ஆத்துார் அடுத்த வடபாதி, அம்பேத்கர் தெருவில் மாலதி, 38, என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, 4 சவரன் தங்க நகை மற்றும் 1,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. அடுத்தடுத்த பகுதிகளில் வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது, கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி