செங்கல்பட்டில் ஆய்வு செய்த ஆட்சியருக்கு அதிர்ச்சி

72பார்த்தது
செங்கல்பட்டில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

மாவட்ட ஆட்சியர் நேரில் சென்ற பொழுது கூட பயமில்லாமல் இருந்த அதிகாரிகள்

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நகராட்சி அறிஞர் அண்ணா பள்ளி திறக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் நேரில் சென்று மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கி மாணவர்களை வரவேற்றார்.


மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு வருவதாக தகவல் முன்கூட்டியே தெரிந்திருந்தும் பள்ளி வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. பள்ளி முழுவதும் குப்பையாக காட்சியளித்தது.


தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பள்ளியை ஆய்வு மேற்கொண்ட பொழுது ஆட்சியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது மட்டுமில்லாமல் அங்கு இருந்த குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததை கண்டு மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் சேர்ந்த அதிர்ச்சடைந்தார். அதேபோன்று அங்கிருந்த , சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் செயல்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி எந்தவித அதைப்படி வசதிகளும் செய்யப்படாமல் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி