முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

62பார்த்தது
மதுராந்தகம் தொகுதியில் சுதந்திர தின விழா கிராம சபை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட கள்ளபிரான்புரம், வேடந்தாங்கல், அண்டவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் 77-வது சுதந்திர தின விழா கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ராதனசேகர், வேதாச்சலம், சுந்தரவரதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்தில் வேடந்தாங்கல் ஊராட்சிக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தீண்டாமை கடைபிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிட கிராமமாக 2023 24 ஆண்டுக்கான பரிசுத்தொகை ரூபாய் பத்து லட்சம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கிராமங்களில் இணைவழியில் வரி செலுத்தும் சேவை தொடங்கப்படுவது குறித்தும், தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் வழங்கப்பட்டதற்கு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய், ஒன்றிய கவுன்சிலர் ஸ்ரீமதி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி