மதுராந்தகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை பேரணி

55பார்த்தது
மதுராந்தகத்தில்
மே தினத்தையொட்டி கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை
பேரணி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் மே தினத்தை விட்டு கோரிக்கை கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.

மதுராந்தகம் நகரில் உள்ள பேருந்து நிலையம் எதிரில் நகரின் முக்கிய வீதிகளில் கட்டிடத் தொழிலாளர்களின் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு மாநிலத் தலைவர் குமார் தலைமை தாங்கினார்.


இந்த கோரிக்கை பேரணியில் வீட்டு வசதி திட்டம், திருமணம், ஓய்வூதியம், இறப்பு ஆகியவை உடனுக்குடன் பார்த்து தொழிலாளருக்கு மிக விரைவில் பயன்பாடுகள் கிடைக்க அரசு முன் வர வேண்டும்,
கலைஞர் தொடங்கிய 36 நல வாரியங்களையும் பாதுகாப்பிற்கு சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றிட அரசு முன் வர வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், வாரிய அட்டை இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாரியத்தின் மூலம் பணப் பலன்களை பெற முடியாததால் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மே தின பேரணியில் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி