செங்கல்பட்டில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு

76பார்த்தது
செங்கல்பட்டில் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு 500-மாணவர்கள் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த பேரணியில் செங்கல்பட்டு மாவட்டு காவல் கண்காணிப்பாளர் சாய். பிரனீத் கலந்துக்கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலைய்த்தில் இருந்து மணிகூண்டு, ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வேதாசலம்நகர் வழியாக வந்த பேரணி இராட்டினங்கிணறு பகுதியில் நிறைவுபெற்றது. இந்த பேரணியில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மூறாம் ரக செயலிகளின் மூலம் லோன் வாங்க வைத்து பின்னர் தங்களின் புகைபடத்தை தவறாக சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி நடைபற்று வருகின்றது, வேலை வாங்கி தருவதாக கூறி அனுப்பிய இணைப்புக்குள் சென்று 10 ரூபாய் அனுப்ப சொல்லி மொத்த வங்கி பணத்தையும் திருடும் மோசடி நடைபெற்று வருகின்றது, பொய்யான வலையதளக் கணக்குகளை உபயோகித்து மற்றவரைத் தொடர்புகொண்டு ஆபாசமான செயல்கள் மூலமாக ஆசைகளை தூண்டி அதை பதிவு செய்துகொண்டு பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் மோசடி நடைபெறுகின்றது எனவே பாதிக்கப்பட்ட நபர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்களாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி