செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சி பகுதியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ. 9) காலை துவக்கி வைக்கப்பட்டது.
இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை, ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், ஆயிரம்விளக்கு எம்எல்ஏ எழிலன், ஒன்றிய சேர்மன் சங்கீதா பாரதிராஜன், 15வது மண்டல குழு தலைவர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Where: சோழிங்கநல்லூர்/பெரும்பாக்கம் பகுதியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்